நீலகிரி வீராங்கனை தேர்வு


நீலகிரி வீராங்கனை தேர்வு
x
தினத்தந்தி 16 Jun 2022 4:34 PM IST (Updated: 16 Jun 2022 4:40 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி வீராங்கனை தேர்வு

நீலகிரி

ஊட்டி

மஞ்சூர் அருகே உள்ள தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா. கால்பந்து வீராங்கனை. தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு தொடர்பான போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மதுமிதா கலந்துகொண்டார்.

அதில் சிறப்பாக செயல்பட்ட அவர், தமிழ்நாடு அணிக்கான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். வருகிற 19-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி வரை அசாமில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு ஹீரோ ஜூனியர் தேசிய கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டியில் தமிழக அணி சார்பில் மதுமிதா விளையாட உள்ளார்.

அவருக்கு, நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் மணி, பெற்றோர், ஆசிரியர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story