கிணத்துக்கடவில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகாந்தி பூ-பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்


கிணத்துக்கடவில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகாந்தி பூ-பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
x

கிணத்துக்கடவில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகாந்தி பூவைபொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் நிஷாகாந்தி பூ உள்ளது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதன் செடியில் பூக்கும் தன்மை கொண்டது. இது இரவு நேரம் பூத்து அதிகாலையில் வாடிவிடும் குணம் கொண்டதாகவும் உள்ளது. மலைப்பிரதேசத்தில் இந்த செடிகள் அதிகளவில் காணப்படும். சமநிலத்தில் வீடுகளில் ஒரு சிலர் இதை வளர்க்கின்றனர். அவ்வகையில் கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் அம்முபாபு (வயது65) என்பவரது வீட்டில் பல ஆண்டுகளாக நிஷா காந்தி செடியை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள நிஷாகாந்தி ஒரே செடியில் 23 நிஷாகாந்தி பூ பூத்துள்ளது.இதனை அந்தபகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சிலர் தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.




Next Story