கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி 28-ந் தேதி நடக்கிறது


கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி 28-ந் தேதி நடக்கிறது
x

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

கடலூர்

நிதி ஆப்கே நிகத்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952-ன் கீழ் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கான 'நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி' வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, திருச்சி மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 12 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இதில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திலும், விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மவுண்ட் பார்க் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியிலும் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது.

குறைகள் நிவர்த்தி

எனவே மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் திருச்சி மண்டல அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பி.எப். ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கொண்ட அனைத்து உறுப்பினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

மேற்கண்ட தகவல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story