பா.ஜனதாவை எதிர்க்கும் தனிப்பெரும் சக்தியாக நிதிஷ்குமார் உருவெடுத்துள்ளார்-ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் பேட்டி


பா.ஜனதாவை எதிர்க்கும் தனிப்பெரும் சக்தியாக  நிதிஷ்குமார் உருவெடுத்துள்ளார்-ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் பேட்டி
x

பா.ஜனதாவை எதிர்க்கும் தனிப்பெரும் சக்தியாக நிதிஷ்குமார் உருவெடுத்துள்ளார் என ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் கூறினார்.

அரியலூர்

ஐக்கிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் மணிநந்தன் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நடைபெற்ற கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-பீகாரில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தேசிய அளவில் நிதிஷ்குமாரை பிரதமராக அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்வதற்கான முதல்படி நிலை ஆகும். மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சியில் பிளவை ஏற்படுத்தி பா.ஜனதா கூட்டணிக்கு துரோகம் செய்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியது போல் பீகாரிலும் செய்ய முயற்சி செய்தது. ஆனால் அதனை முறியடித்து பா.ஜனதா கட்சியின் முகத்திரையை கிழித்ததின் மூலம் பா.ஜனதாவை எதிர்க்கும் தனிப்பெரும் சக்தியாக கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தற்போது உருவெடுத்துள்ளார். பா.ஜனதா பாணியிலேயே அவர்களுக்கு நிதிஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது அனைத்து மாநிலத்திலும் ஆளும் முதல் அமைச்சர்களுக்கு பெருத்த உற்சாகத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி எங்களது தலைமையை ஏற்று கூட்டணி அமைத்தால் பா.ஜனதாவை எதிர்த்து நாடு முழுவதும் ஒற்றுமையாக செயல்பட்டு மத்தியில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை ஏற்காத நிலையில் 3-வது அணியாக எங்களது அணி அமையும். இனி பா.ஜனதா கட்சிக்கு சறுக்கல்கள் மட்டுமே இருக்கும். நாட்டிலுள்ள அனைத்து மாநில கட்சிகளும் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு ஒற்றுமையாக செயல்பட்டு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். அதேபோல் தமிழ்நாட்டிலும் ஒத்த கருத்துடைய கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story