நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு: பா.ஜனதா மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு: பா.ஜனதா மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பா.ஜனதா மகளிர் அணி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பெண்கள் குறித்து சட்டசபையில் பேசியது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பெண்கள் அமைப்பினர் நிதிஷ்குமார் பேச்சுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பா.ஜனதா மகளிர் அணி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் பிரமிளா சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகளிர் அணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story