நித்திய கல்யாணி அம்பாள் கோவில் தெப்பத் திருவிழா


நித்திய கல்யாணி அம்பாள் கோவில் தெப்பத் திருவிழா
x
தினத்தந்தி 28 Aug 2023 12:30 AM IST (Updated: 28 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நித்திய கல்யாணி அம்பாள் கோவில் தெப்பத் திருவிழா நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் வில்வவனநாதர் - நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நேற்று முன்தினம் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சுவாமி-அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளி, தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்தனர்.

விழாவில் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆய்வாளர் சரவணகுமார், தக்கார் கோமதி, செயல் அலுவலர் முருகன் மற்றும் அப்பர் உழவாரப் பணி குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.



1 More update

Next Story