வாக்காளர் சிறப்பு முகாமை, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு


வாக்காளர் சிறப்பு முகாமை, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே வாக்காளர் சிறப்பு முகாமை, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் பூம்புகார் சட்ட மன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. பொறையாறு அருகே காழியப்பநல்லூர் மற்றும் திருக்கடையூர் ஊராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார். அப்போது முதல்முறை பெயர் சேர்க்க வந்தவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பெற்று பணியில் இருந்த தாலுகா அலுவலர்களிடம் வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.விஜயபாலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, தி.மு.க. தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story