என்.எல்.சி. முற்றுகை: 93 வழக்குகள் பதிவு- 26 பேர் கைது-கடலூர் காவல்துறை


என்.எல்.சி. முற்றுகை: 93 வழக்குகள் பதிவு- 26 பேர் கைது-கடலூர் காவல்துறை
x

என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 26 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கடலூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தொடர்பாக அன்புமணி உட்பட ஏராளமானோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட ஒருசில மணி நேரத்தில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 26 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கடலூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 11 பேர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும், வடக்கு மண்டலத்தில் சாலை மறியல்கள் நடத்த முயன்றவர்கள் கைதுசெய்து விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

மேலும், ஆகாஷ் உள்ளிட்ட 26 பேரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், சட்டத்திற்கு முரண்பட்ட 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் கடலூர் காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story