என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்
அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உரிய பாதுகாப்பு அமல்படுத்தப்பட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலாளர் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த மஸ்தூர் சங்கத்தினர்(பாரதீய மஸ்தூர் சங்கம்) கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். மஸ்தூர் சங்கத்தை சேர்ந்த வீரவன்னியராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டல கமிட்டி மற்றும் பொதுச்செயலாளர் சங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் துரை.ரவி, முன்னாள் பொருளாளர் ராஜசேகரன், நிர்வாகிகள் ரீஜேஸ், பாபு, சக்திவேல், ராஜவேல், ராமலிங்கம், வினோத்குமார், பிரான்சோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி அருள் முருகன் நன்றி கூறினார்.