நெய்வேலிஎன்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவராக மோகன்ரெட்டி பொறுப்பேற்பு


நெய்வேலிஎன்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவராக மோகன்ரெட்டி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவராக மோகன்ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. தலைவராக பணியாற்றி வந்த ராகேஷ்குமார் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து என்.எல்.சி. நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனராக பணியாற்றி வரும் மோகன் ரெட்டிக்கு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் என்.எல்.சி. தலைவராக செயல்படுவதற்கான கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மோகன்ரெட்டி நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர், நெய்வேலி வட்டம் 27 பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, என்.எல்.சி. நிறுவனம் அமைவதற்கு தனது நிலங்களை வழங்கிய ஜம்புலிங்க முதலியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், என்.எல்.சி. சுரங்க பகுதிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டதோடு, சுரங்க வளர்ச்சிப்பணிகள் குறித்து சுரங்கத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். என்.எல்.சி. தலைவராக பொறுப்பேற்ற மோகன்ரெட்டிக்கு சக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மோகன் ரெட்டி மனிவளத்துறை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story