கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்,
ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா மாநிலம் பாலசுருக்கு 250 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்மண்டலமாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்காளம் இடையே உள்ள சாகர் தீவுகள் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.
கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை, அன்னங்கோவில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களுடைய படகுகளை அந்தந்த பகுதியில் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.