'மின்சாதன பயன்பாட்டை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது' - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு


மின்சாதன பயன்பாட்டை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
x

நிலைக்கட்டணம் மீதான அபராதம் விதிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடைக்காலத்தை முன்னிட்டு ஏ.சி., வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இத்தகைய மின்சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக சேவைக் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக அண்மையில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு மின் வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளுக்கு நிலைக்கட்டணம் வசூலிப்பதில் இருந்து கடந்த 10.8.2022 முதல் தொடர்ந்து விலக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், எனவே நிலைக்கட்டணம் மீதான அபராதம் விதிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம் எனவும், அந்த கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விதிகளின் மீது இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.


1 More update

Next Story