ஆடிப்பெருக்கையொட்டி இன்று பத்திரப்பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது


ஆடிப்பெருக்கையொட்டி இன்று பத்திரப்பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
x

ஆடிப்பெருக்கு தினமான இன்று பத்திரப்பதிவிற்கு விடுமுறை தின கூடுதல் கட்டணமான ஆயிரம் ரூபாய் வசூலிக்க கூடாது என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


ஆடிப்பெருக்கு தினமான இன்று பத்திரப்பதிவிற்கு விடுமுறை தின கூடுதல் கட்டணமான ஆயிரம் ரூபாய் வசூலிக்க கூடாது என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு

தமிழக அரசால் விடுமுறைதினமாக அறிவிக்கப்பட்ட நாட்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் அதற்கு கூடுதல் கட்டணமாக அரசு விதிமுறைப்படி ரூ.ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. தைப்பூசம் போன்ற நாட்களில் இம்மாதிரியான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை தினமாக உள்ள நிலையில் அன்றைய தினம் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று ஆடிப்பெருக்கு தினமாக உள்ள நிலையில் விடுமுறை தின கட்டணம் இன்றைய தினம் பத்திரப்பதிவு செய்ய வசூலிக்கப்படும் என்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம்

அரசு அறிவித்துள்ள விடுமுறை தின பட்டியலில் ஆடிப்பெருக்கு தினம் இடம் பெறாத நிலையில் இந்த தினத்தில் பத்திர பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. ஆனால் பத்திரப்பதிவுத்துறை தலைவர் இதுகுறித்து அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு விதிமுறைக்கு முரணாக விடுமுறை தினம் இல்லாத நாளில் விடுமுறை தின கூடுதல் கட்டணமாக பத்திரப்பதிவிற்கு வசூலிப்பதை தவிர்க்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றால் முகூர்த்த நாட்களிலும் கூட பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டு விடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Next Story