'தடை விதித்த கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க கூடாது'-துண்டுபிரசுரம் வினியோகம்
தடை விதித்த கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க கூடாது’ என கீழக்கரையில் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
கீழக்கரை,
கீழக்கரை வனத்துறை சார்பாக புதிய மீன் மார்க்கெட்டில் உள்ள மீன் வியாபாரிகள் இடையே தடை செய்யப்பட்டுள்ள கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பது மற்றும் விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமை தாங்கி தடை செய்யப்பட்ட கடல் ஆமை, கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற கடல் வாழ் உயிரினங்களை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் மீன் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வனவர் கனகராஜ், வனக்காப்பாளர் பிரபு, சோமுராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் ராமர், நாகராஜன், மகேந்திரன் மற்றும் மீன் வியாபாரிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story