பெட்ரோல், டீசல் விலையில் 439-வது நாளாக மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 439-வது நாளாக மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85 ஆகவும், டீசல் ரூ.102.59 ஆகவும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம் தொட்டதால் வாகன ஓட்டிகள் கலங்கி போகினர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்ற இறக்கமாக பெட்ரோல், டீசல் விலை இருந்தது. 2022 ஆம் ஆண்டு சென்னையில் மே 21 ஆம் தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.110.85 ஆகவும், டீசல் 100.94 ரூபாய் விற்பனையானது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விதமாக அதன் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதனால், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.63 ஆகவும் டீசல் ரூ.94.24 ஆகவும் குறைந்தது.
அதன்பிறகு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை இடையில் குறைந்த போதும் கூட பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதேவிலையில் நீடித்து வருகிறது. அந்த வகையில், 439-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது.