பெட்ரோல், டீசல் விலை: 182-வது நாளாக மாற்றம் இல்லை


பெட்ரோல், டீசல் விலை: 182-வது நாளாக மாற்றம் இல்லை
x

பெட்ரோல், டீசல் விலை 182 வது நாளாக மாற்றம் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு விலைக்குறைப்பு செய்தது.

அதன்பிறகு கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி காணப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலையில் 182-வது நாளாக மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63-க்கும் டீசல் விலை ஒரு லிட்டர் 94.24-க்கும் விற்பனையாகிறது.


Next Story