தமிழ்நாட்டில் எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை... அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
அரசு பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்து உள்ளார்
சென்னை,
மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில், எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, திமுக ஆட்சி அமைந்தபின் தமிழகத்தில் எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதல்வருக்கு பெற்றுத்தந்துள்ளது என்று கூறிய அவர், கட்டணமில்லா பயண திட்டத்தில் இதுவரை 277.13 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணிக்கு எடுக்கவில்லை என்றும், அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய் அறிக்கையினை வெளியிட்டு உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.