தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது


தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது
x

தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று வேலூரில் நடந்த முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

வேலூர்

தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று வேலூரில் நடந்த முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

வேலூரில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கொம்பனாலும் அசைக்க முடியாது

இங்கு நடைபெறும் விழா கழக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள். உழைப்பவர்களை கவுரவிக்கும் கட்சி இந்தியாவிலேயே ஒரே கட்சி தி.மு.க. தான். கலைஞரின் கட்டளையை ஏற்று நான் எந்த மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த மாவட்டத்தில் உள்ள மூத்த முன்னோடிகளை கவுரவித்து வருகிறேன்.

அதன்படி இதுவரை 30 மாவட்டத்தில் ரூ.30 கோடி வரை மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி உள்ளோம்.

இதனால் தான் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்கக்கூட முடியவில்லை. இந்த இயக்கத்தின் கிளை செயலாளரை கூட அசைத்து பார்க்க முடியாது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞரணிக்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாரத்தான் ஓட்டம், பேச்சு போட்டிகள் நடத்துவது, நூலகம் அமைத்தல் உள்ளிட்டவை அனைத்து மாவட்டங்களில் நடத்தி வருகிறோம்.

இளைஞரணி மாநாடு

கழகத்தின் இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற டிசம்பர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி காட்டுவேன்.

நான் பல மாவட்டத்துக்கு செல்லும்போது பெண்கள் பலர் வாழ்த்துகின்றனர். முதல்-அமைச்சருக்கு நன்றி கூறுங்கள் என்கின்றனர்.

இந்தியாவிலேயே உயர்ந்த திட்டமாக மகளிருக்கு உரிமைத்தொகை திட்டம் அமைந்துள்ளது. பல மாநிலங்களில் பாராட்டி வருகின்றனர். எழுச்சியாக மக்கள் இருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் எப்படி அடிமைகளை தோற்கடித்தோமோ, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் எஜமானர்களையும் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story