திருவள்ளூர் , ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு


திருவள்ளூர் , ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு
x

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

திருவள்ளூர்,

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story