குடவாசல் பஸ் நிலையம் வெறிச்சோடியது
மாண்டஸ் புயல் காரணமாக குடவாசல் பஸ் நிலையம் வெறிச்சோடியது. மேலும் கடைத்தெருவில் மக்கள் கூட்டம் குறைந்தது.
குடவாசல்;
மாண்டஸ் புயல் காரணமாக குடவாசல் பஸ் நிலையம் வெறிச்சோடியது. மேலும் கடைத்தெருவில் மக்கள் கூட்டம் குறைந்தது.
புயல் எச்சரிக்கை
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அரசு சார்பில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மாண்டஸ் புயல் காரணமாக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க குடவாசலில் பொதுமக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் வரவில்லை.நேற்று காலையிலேயே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடையில் இருந்து வாங்கி சென்று விட்டனர். இதனால் மதியம் கடைவீதிகள் வெறிச்சாடி காணப்பட்டது.
வெறிச்சோடியது
பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.புயல் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தயார் நிலையில் இருந்தனர்.