நீட் தேர்வு தேவையில்லை: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை,
அதிமுகவின் மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் முன்னாள் முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆலோசனைக் கூட்டமும் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அவரது அணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத்தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக வருகை தந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், "நீட் தேர்வு தேவையில்லை" என்றார்.
Related Tags :
Next Story