தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை


தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை
x

தமிழ்நாட்டில் கொரோனா கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படுவதில்லை. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று 487 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 2 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதைபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.


Next Story