ஜெயலலிதா இருந்தவரையில் எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது - திருச்சி சிவா எம்.பி. பதிலடி


ஜெயலலிதா இருந்தவரையில் எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது - திருச்சி சிவா எம்.பி. பதிலடி
x

"ஜெயலலிதா மருத்துவமனைக்கு போகும்வரை, இப்படி ஒரு அமைச்சர் இருந்தார் என யாருக்காவது தெரியுமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி சிவா, எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை,

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உண்மை என்று கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "1987ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி கருப்பு நாள். அன்றைய தினம் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். பின்னர் ஜெயலலிதா சபதம் செய்து, முதலமைச்சராக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் என்றும் அதனை நான் நேரில் பார்த்தவன்" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இன்று திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா இருந்தவரையில் எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது. அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான், எடப்பாடி பழனிசாமி வெளியே தெரிகிறார். அவர் ஏதோ பக்கத்தில் இருந்து 1989-இல் சட்டமன்றத்தில் பார்த்தது போல கூறுகிறார். அன்றைய தின நிகழ்வில் எங்கள் தலைவர் கலைஞரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவரும் தாக்கப்பட்டார். அன்றைய நாள் சட்டமன்ற நிகழ்வில் உடன் இருந்த திருநாவுக்கரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோரிடம் இதனை பற்றி கேளுங்கள்" என்றார்.


Next Story