சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை ; போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை ; போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என குலசேகரன்பட்டினத்தில் நடந்த வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என குலசேகரன்பட்டினத்தில் நடந்த வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார்.

கலந்துரையாடல் கூட்டம்

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் அனல்மின் நிலைய கட்டுமான பகுதிக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் நெல்லை மாவட்டம் அம்பை உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங் ஆகியோர் நேற்று நேரடியாகச் சென்றனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். அவர்களுக்கு புரிவதற்காக இந்தி மொழியிலேயே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அச்சப்பட தேவையில்லை

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசுகையில், "தற்போது வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை எனது தலைமையில் தங்கள் பகுதி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் உள்ளோம். நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பாதுகாப்பிற்காக எப்போதும் காவல் துறை உள்ளது. மேலும் உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சாத்தான்குளம் உதவி சூப்பிரண்டு அருள், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story