பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை: வதந்திகளை நம்பவேண்டாம்- ஆவின் நிர்வாகம் தகவல்


பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை: வதந்திகளை நம்பவேண்டாம்- ஆவின் நிர்வாகம் தகவல்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை,

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு, ராயபாளையத்தில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை ஊற்றியும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை என்றும், வழக்கம்போல் பால் கொள்முதல் நடைபெற்றதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு சில சங்கங்கள் தவிர இதர சங்கங்கள் வழக்கமான அளவுக்கு பால் வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் நிலைமையை பயன்படுத்தி, பால் கொள்முதல் செய்ய நடத்திய முயற்சிகள் முறிக்கப்பட்டுள்ளது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


Next Story