புகையிலை ஒழிப்பு தின பேரணி


புகையிலை ஒழிப்பு தின பேரணி
x

மூலைக்கரைப்பட்டியில் புகையிலை ஒழிப்பு தின பேரணி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதிமோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி செல்லும் வழியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுப்பட்டது. பின்னர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த பேரணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story