செயல்படாத ஆதார் மையம்


செயல்படாத ஆதார் மையம்
x

ஆதார்மையம் செயல்படாத நிலை உள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. இங்கு புதிய ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் உள்ள முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள் குறைந்த கட்டணத்தில் செய்து கொடுக்கப்பட்டு வந்தது. நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஆதார் மையத்துக்கு தினமும் 50 பேர் வந்து பயன் பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ஆதார் மையம் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதார் மையம் செயல்படவில்லை என்று இதனை சரி செய்ய மும்பையில் உள்ள தலைமையிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்து சில வாரங்களில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் முன்னேற்பாடாக ஆதார் அட்டைகளை எடுக்கவும், அதில் உள்ள பிழைகளை சரி செய்யவும் பொதுமக்கள் முயற்சி செய்யும் போது அந்த பணிக்கு தொழில்நுட்ப கோளாறு தடையாக இருக்கிறது. ஆதார் அட்டைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய விண்ணப்பித்தால் அதனை ஏற்று சரி செய்ய குறைந்த பட்சம் 1 மாத காலம் தேவைப்படும். எனவே சிவகாசி தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஆதார் மையம் உடனே செயல்பட தேவையான நடவடிக்கையை தபால் துறையினர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story