கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் கருப்பு உடை அணிந்த நபரின் கையில் கயிறு கட்டி இழுத்து வந்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து புருசோத்தமன் கூறுகையில், ''வடகிழக்கு பருவ மழையால் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை வெள்ளப் பெருக்கால் பயிர் சேதம் ஏற்பட்டது. மேலும் ஜூன், ஜூலை மாதத்தில் வறட்சி சமயத்தில் பயிர் சேதம் ஏற்பட்டது. இந்த பேரிடரால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் மகசூல் இழப்பு பெற பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 12 தனியார் காப்பீடு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப் படுகிறது. பேரிடர் பாதிக்கும் போது பயிர் மகசூல் பாதிப்பு அறிய தனியார் நிறுவன ஏஜெண்டு நியமனம் செய்வது மோசடி ஆகும்.
தனியார் நிறுவனத்திற்கு காப்பீடு அனுமதிக்க கூடாது. பிரிமியம் ரூ.560 ஏக்கருக்கு செலுத்திய விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் நேரடி பணம் தர வேண்டும். இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.'' என்றார்.
இதில் விவசாயிகள் சம்பத், மலைகோவிந்தன், தேவ்ராஜ், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.