கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்


கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
x

மங்கலத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள வேளாண் விரிவாக்கம் மையம் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் வேளாண் விரிவாக்கம் மைய அலுவலகம் முன்பு தரையில் வரட்டி தட்டி நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், தமிழகத்தில் உபரி மின்சாரம் 40 சதவீதம் உள்ள நிலையில் வேளாண் விளை பொருட்களுக்கு லாப விலை கிடைக்காததால் தமிழகம் முழுவதும் உள்ள விளை நிலங்கள் 40 சதவீதம் வீட்டு மனைகளாக மாறி உள்ளது.

வளர்ச்சி என்ற பெயரில் சாகுபடி செய்யும் விளைநிலங்களை அரசு நிறுவனங்களுக்கு கையகப்படுத்தி தருவதும், சாகுபடி நிலங்களை அழிப்பதும் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதை சுட்டி காட்டும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story