நிலம் விற்ற பணத்தை கொடுக்காத தொழில் அதிபர் வீட்டின் முன்பு வயதான தம்பதி தர்ணாஈரோட்டில் பரபரப்பு


நிலம் விற்ற பணத்தை கொடுக்காத தொழில் அதிபர் வீட்டின் முன்பு வயதான தம்பதி தர்ணாஈரோட்டில் பரபரப்பு
x

நிலம் விற்ற பணத்தை கொடுக்காத தொழில் அதிபர் வீட்டின் முன்பு வயதான தம்பதி தர்ணா போராட்டம் நடத்தியதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் நிலம் விற்ற பணத்தை கொடுக்காத தொழில் அதிபர் வீட்டின் முன்பு வயதான தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் தர்ணா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வள்ளியிரச்சல் செட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 74). இவருக்கு சொந்தமான இடம் ஈரோடு மோளகவுண்டம்பாளையத்தில் இருந்தது. இந்த நிலத்தை ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபருக்கு கடந்த 2018-ம் ஆண்டு விற்பனை செய்தார். அப்போது ரூ.5 லட்சத்தை அந்த தொழில் அதிபர் கொடுக்காமல் வங்கியில் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியில் வசித்து வரும் அந்த தொழில் அதிபரின் வீட்டுக்கு மணி தனது மனைவியுடன் நேற்று காலை பணத்தை கேட்க சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் ெதாழில் அதிபரின் வீட்டின் முன்பு முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று வயதான தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணி கூறியதாவது:-

நான் மோளகவுண்டம்பாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்தபோது, ரூ.5 லட்சத்தை மட்டும் பிடித்தம் செய்து கொள்வதாக கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த தொழில் அதிபர் தெரிவித்தார். அப்போது அவர், நிலத்தை கிரயம் செய்வதை ரத்து செய்யாமல் இருப்பதற்காக ரூ.5 லட்சத்தை வங்கியில் 'ஜாயிண்ட்' கணக்கில் வரவு வைப்பதாக கூறினார். 3 மாதங்கள் கழித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அதன்பிறகு பலமுறை கேட்டும், வங்கியில் உள்ள பணத்தை அவர் எடுத்து கொடுக்கவே இல்லை. எனவே எனக்கு வரவேண்டிய ரூ.5 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பணத்தை மீட்டு கொடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மணியும், அவரது மனைவியும் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு பேச்சுவார்த்தைக்காக அவர்கள் சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story