வரத்து அதிகரிப்பால் நூக்கோல் விலை வீழ்ச்சிஒரே நாளில் கிலோவிற்கு ரூ.12 குறைந்தது


வரத்து அதிகரிப்பால் நூக்கோல் விலை வீழ்ச்சிஒரே நாளில் கிலோவிற்கு ரூ.12 குறைந்தது
x
தர்மபுரி

தர்மபுரி

நூக்கோல் வரத்து அதிகரிப்பால் அதன் விலை வீழ்ச்சியடைந்து ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.12 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ ரூ.66- க்கு விற்பனையானது.

உற்பத்தி குறைந்தது

பருவநிலை மாறுபாடுகளால் தமிழ்நாட்டில் காய்கறிகள் உற்பத்தி குறைந்தது. இதனால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் தமிழ்நாட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

இதனால் தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்றான நூக்கோல் கிருஷ்ணகிரி, ஓசூர், தளி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு நூக்கோல் வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ.80-க்கு மேல்அதிகரித்தது.

ரூ.12 குறைந்தது

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று முன்தினம் 1 கிலோ நூக்கோல் ரூ.78-க்கு விற்பனையானது. நேற்று நூக்கோல் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று விலை வீழ்ச்சி அடைந்து கிலோவிற்கு ரூ.12 விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ நூக்கோல் ரூ.66-க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.75 வரை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது நூக்கோல் விலை நேற்று குறைந்ததால் அதன் விற்பனை அதிகரித்தது.


Next Story