வடகிழக்கு பருவமழையால் கடலில் சீற்றம்: பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


வடகிழக்கு பருவமழையால் கடலில் சீற்றம்: பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x

வடகிழக்கு பருவமழையால் கடலில் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் பழவேற்காடு ஏரியில் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இங்கு 300-க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்களில் வசிக்கும் மீனவர்கள் ஏரி மற்றும் வங்க கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், கடல் காற்று வீசுவதால் பழவேற்காடு கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் பழவேற்காடு ஏரியில் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் தொடர் மழையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


Next Story