பொள்ளாச்சியில் வடக்கு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


பொள்ளாச்சியில் வடக்கு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் வடக்கு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதற்கு, ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆணையாளர் முத்துமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தின்போது வட்டார கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில், வட்டார கல்வித்துறை மூலம் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தாலும், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் குறித்து தெரிவித்து, அவர்களை அந்தந்த பகுதி அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 5 வயது நிறைவடைந்த குழந்தைகளின் பெற்றோரிடம் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்து கூறி அவர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன், பள்ளி செல்லாக்குழந்தைகளே இல்லை என்ற நிலை உருவாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க கேட்டு கொள்ளப்படுகிறது' என்றனர். இதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 15 செலவினங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story