ரோடு ரோலரில் சிக்கி வடமாநில தொழிலாளி சாவு


ரோடு ரோலரில் சிக்கி வடமாநில தொழிலாளி சாவு
x

பாணாவரம் அருகே ரோடு ரோலரில் சிக்கி வடமாநில தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை

மத்தியபிரதேச மாநிலம், மொரனா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 34). பாணாவரம் பகுதியில் நடைபெற்றுவரும் சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணியில் ரோடு ரோலர் மெக்கானிக்காக இவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 3-க்கும் மேற்பட்ட ரோடு ரோலர்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ரோடு ரோலர் ஒன்றின் சக்கரம் ரஞ்சித்தின் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த ரஞ்சித் பூட்டுதாக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.டாக்டர்கள் பரிசோதித்தபோது ரஞ்சித் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story