கிணத்துக்கடவு அருகே மயங்கி விழுந்த வட மாநில தொழிலாளர் சாவு


கிணத்துக்கடவு அருகே மயங்கி விழுந்த வட மாநில தொழிலாளர் சாவு
x
தினத்தந்தி 17 July 2023 1:00 AM IST (Updated: 17 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே மயங்கி விழுந்த வட மாநில தொழிலாளர் சாவு

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்தூரில் ராஜி என்பவரது தோட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பணிபுரியும் நபர் ஒருவரை பார்ப்பதற்காக அசாம் மாநிலத்தில் இருந்து மிராஜுல் இஸ்லாம் (வயது 23) என்ற வாலிபர் வந்தார். இந்நிலையில் மிராஜுல் இஸ்லாம் திடீரென மயங்கி விழுந்ததோடு அவரின் வாயில் நுரை தள்ளியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மிராஜுல் இஸ்லாமை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மிராஜுல் இஸ்லாம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story