மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி பலி
கரூர் அருேக மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வடமாநில ெதாழிலாளி சாவு
உத்தரபிரதேச மாநிலம் நாராயண தந்துருளி அருகே உள்ள ஜம்டியை சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவர் கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் டையிங் தொழிற்சாலையில் தங்கியிருந்து கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் ஆகாஷ் குமார் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, மின்சார கம்ப்ரசர் மீது தண்ணீர் பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அதன் அருகே நின்று கொண்டிருந்த ஆகாஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலகுராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆகாஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.