காட்டு யானை தாக்கி வட மாநில வாலிபர் காயம்


காட்டு யானை தாக்கி வட மாநில வாலிபர் காயம்
x
தினத்தந்தி 1 Aug 2023 1:15 AM IST (Updated: 1 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

பாரதியார் பல்கலைக்கழகம் அருகே காட்டு யானை தாக்கி வடமாநில வாலிபர் காயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்
வடவள்ளி


பாரதியார் பல்கலைக்கழகம் அருகே காட்டு யானை தாக்கி வடமாநில வாலிபர் காயம் அடைந்தார்.


காட்டு யானைகள் நடமாட்டம்


கோவை மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில வாரங்க ளாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது.

அவை, வனத்தை விட்டு வெளியேறி மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி, கல்வீ ரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழக பகுதிகளில் சுற்றித் திரிகிறது. கடந்த 24-ந் தேதி நவாவூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் ரேஷன் கடையை சேதப்படுத்தியது.

இந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து ஒரு காட்டு யானை பாரதியார் பல்லைக்கழக வளாகத்தில் உள்ள இருப்பு அறையை சேதப்படுத்தியது.

யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.


வட மாநில வாலிபர்


இந்த நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது30) என்பவர் தனது நண்பர்களுடன் கல்வீரம்பாளையத்தில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

அவர், நேற்று அதி காலையில் தனது நண்பர்கள் 2 பேருடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு புதர்மறைவில் இருந்து காட்டு யானை ஒன்று திடீரென்று வெளியே வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடத் தொடங்கினர்.

ஆனால் காட்டு யானை அவர்களை விடாமல் துரத்தி சென்றது. இதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.


காட்டு யானை தாக்கியது


ஓடும் போது தவறி விழுந்த மனோஜ்குமாரை காட்டு யானை தந்தத்தால் குத்தி வீசியது. இதில் காயம் அடைந்த அவர் கூச்ச லிட்டார். அந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் திரண்டு வந்த னர். இதற்கிடையே காட்டு யானை அங்கிருந்து சென்று விட்டது.


இதைத்தொடர்ந்து மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Next Story