வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கோயம்புத்தூர்
நெகமம்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்தர்(வயது 35). இவருடைய மனைவி சரோஜினி(30). இவர்களுக்கு 12 வயதில் மகன் உண்டு. இந்த நிலையில் மகேந்தர் தனது மனைவி மற்றும் மகனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெகமம் அருகே ஜக்கார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னைநார் தொழிற்சாலைக்கு வந்தார். பின்னர் அங்கு தங்கியிருந்து, தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சரோஜினி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story