வடமாநில வாலிபர் கைது


வடமாநில வாலிபர் கைது
x

மானாமதுரையில் ஏ.டி.எம்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை பஸ் நிலையம் அருகே கடந்த 28-ந்தேதி நள்ளிரவில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. அந்த வழியாக போலீசார் ரோந்து வந்ததால் ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மேற்கு வங்காளம் சோன்காலி பகுதியைச் சேர்ந்த டெபப்ராதா பூன்யா(34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது ராமேசுவரம் பகுதியில் ஓட்டலில் வேலை பார்த்தது தெரிய வந்தது.


Related Tags :
Next Story