கோயம்பேட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வடமாநில வாலிபர்


கோயம்பேட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வடமாநில வாலிபர்
x

கோயம்பேட்டில் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்கப்படுவதாக அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து கோயம்பேட்டில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருக்க வடமாநில நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், கைது செய்யப்பட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பியாசதேப்ராணா (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா, 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் மேற்கு குறுக்கு சாலையில் கஞ்சா விற்ற ரமேஷ் குமார் (38) என்பவரை கைது செய்தனர்.

கோயம்பேடு மேம்பாலம் அருகே தடை செய்யப்பட்ட 1 டன் குட்காவை பதுக்கி வைத்திருந்த கோயம்பேட்டை சேர்ந்த சுரேஷ் (32), என்பவரை கைது செய்தனர்.


Next Story