வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலய தேர்பவனி
வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் திருப்பலி, ஜெபமாலை, குணமளிக்கும் வழிபாடு நடத்தப்பட்டது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு தேரடி திருப்பலி பங்குத்தந்தை எம். எஸ். அந்தோணிசாமி தலைமையில் பங்கு தந்தைகள் ஏ. எஸ். சூசை செல்வராஜ், ஜி. குழந்தை ராஜ், ஜெ. எட்வின் ராஜ், பங்குத்தந்தை சதீஷ் செல்வதயாளன் ஆகியோரால் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதில் திரளான இறைமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story