வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு


வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு
x

செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது செங்கம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 5 போலீஸ் நிலையங்களில் முடிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கைகளை சரி பார்த்தார்.

மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஐ.ஜி. உத்தரவிட்டார்.

ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ஆல்பர்ட் ஜான், செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட காவல்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story