நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: சத்தியமங்கலம் நாட்டார்களின் மண்டகப்படி


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: சத்தியமங்கலம் நாட்டார்களின் மண்டகப்படி
x

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சத்தியமங்கலம் நாட்டார்களின் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மேலும், அம்மன் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவில் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

அம்மன் வீதியுலா

இந்தநிலையில், சத்தியமங்கலம் ஊராட்சியை சேர்ந்த நாட்டார்கள் சார்பில் 8-வது மண்டகப்படி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவன் பெரிய கோவிலில் இருந்து பல்லக்கில் அம்மன் வீதியுலா புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. கோவிலில் சத்தியமங்கலம் நாட்டார்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதில் சத்தியமங்கலத்தை சேர்ந்த நாட்டார்கள் பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story