வடகிழக்கு பருவமழை: அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை


வடகிழக்கு பருவமழை: அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை
x

வடகிழக்கு பருவமழை குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மதிவேந்தன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம், நகராட்சி நிர்வாகம் என மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் துறை அதிகாரிகளுடன் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் மழைநீர் வடிகால் பணிகள், ஆகாயத் தாமரையை அகற்றுவது உள்ளிட்டவை குறித்தும் கடந்த ஆண்டைவிட கூடுதலாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில்அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story