வடக்கு துணை கமிஷனர் அலுவலகம் காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றம்


வடக்கு துணை கமிஷனர் அலுவலகம் காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றம்
x

வடக்கு துணை கமிஷனர் அலுவலகம் காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி:

திருச்சி மாநகர காவல்துறை வடக்கு, தெற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டு வடக்கிற்கு ஒரு துணை போலீஸ் கமிஷனரும், தெற்கிற்கு ஒரு துணை போலீஸ் கமிஷனரும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். தெற்கு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் திருச்சி பீமநகர் ஹீபர்ரோட்டில் செயல்பட்டு வருகிறது. வடக்கு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் திருச்சி மாநகர காவல்துறையில் தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்காக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த வடக்கு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தலைமையிட துணை கமிஷனருக்காக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வடக்கு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய கட்டிடத்தின் முதல்தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.


Next Story