வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருவட்டார் அருகே உடல்நிலை சரியில்லாத தந்தையை கவனிக்க முடியாததால் மேற்கு வங்க தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார் :

திருவட்டார் அருகே உடல்நிலை சரியில்லாத தந்தையை கவனிக்க முடியாததால் மேற்கு வங்க தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொத்தனார்

மேற்கு வங்காளம் கூச் பிகார் என்ற பகுதியை சேர்ந்தவர் சஞ்சிப் பர்மன் (வயது 34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 2 ஆண்டுகளாக திருவட்டார் அடுத்துள்ள ஆற்றூரில் ராபின்சன் என்பவரின் சிமெண்டு கல் தயாாிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய தந்தை நிரேன் பர்மன் நோய்வாய்பட்டு 2 கால்களும் செயல்படாமல் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இதனால் மனமுடைந்த சஞ்சிப் பர்மன், உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் தந்தையின் அருகில் இருந்து கவனிக்க முடியவில்லைேய என்று கூறி புலம்பியுள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று சஞ்சிப் பா்மன் அருகில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story