வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்


மேச்சேரி:-

பீகார் மாநிலம் சார்போ காரி ரோக்தாஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் சிங் (வயது 30). இவர் மேச்சேரியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் மேச்சேரியில் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு மனைவி, குழந்தைகளுடன் தூங்க சென்றார். அதிகாலையில் மனைவி எழுந்து பார்த்தபோது வீட்டின் பூஜை அறையில் ராஜ்குமார் சிங் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story