தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்

ஈரோடு

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கணபதி ராம்(வயது 35). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கரட்டூர் வ.உ.சி வீதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி ரேகா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு ராஜஸ்தானுக்கு ரேகா சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் கணபதி ராம் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கணபதி ராம் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணபதி ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story