வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் வீடியோ பதிவு செய்தவாறு வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கு காதல் விவகாரம் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு
செல்போனில் வீடியோ பதிவு செய்தவாறு வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கு காதல் விவகாரம் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளி
பீகார் மாநிலம் நவ்டா பகுதியை சேர்ந்தவர் அணில்ராம். இவரது மகன் குந்தன்குமார்(வயது 22). கூலித்தொழிலாளி.
இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் உள்ள மெத்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அதே நிறுவனத்தில் தனக்கு வழங்கப்பட்டு இருந்த அறையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குந்தன்குமார் தனது அறையில் இருந்தார். அவருடன் தங்கியிருந்த லாலாகுமார் என்பவர் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தார். கதவை நீண்ட நேரம் தட்டியும் குந்தன்குமார் திறக்கவில்லை. இதனால் லாலாகுமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.
வீடியோ பதிவு
அப்போது குந்தன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை அறிந்து வந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், ஏற்கனவே பீகாரில் இருந்தபோது குந்தன்குமார் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் தற்போது அவர் தற்கொலை செய்வதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
அந்த செல்போனை போலீசார் கைப்பற்றி அவர் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.