நொச்சிபாளையம் பிரிவு கழிவுநீர் கால்வாயில் கழிவுகள் அகற்றம்


நொச்சிபாளையம் பிரிவு கழிவுநீர் கால்வாயில் கழிவுகள் அகற்றம்
x
திருப்பூர்


திருப்பூர் பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அவ்வப்போது கழிவுநீர் சாலையோரம் தேக்கமடைந்து சாலை நடுவே தேக்கம் அடைந்ததோடு, துர்நாற்றம் வீசி வந்தது. இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலமாக சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சாலையோர வியாபாரிகள் கூறுகையில் 'நொச்சிபாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் நேரடியாக வீரபாண்டி பிரிவு பகுதியில் தேக்கமடைகிறது. இப்பிரச்சினை பல வருடங்களாக நீடித்து வருகிறது. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கழிவுநீர் செல்ல முடியாத பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் தொற்றுநோய் பரவாமல் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அதிகாரிகள் கூறுகையில் 'கழிவுநீர் தேக்கமடைந்த பகுதிகளில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், மேலும் விரைவாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


Next Story